இந்த
கம்பினை பாவிக்கும் பாவனயாளர்களின் நலன் கருதியும், அதற்கான விளம்பரப்பாடலை படிக்கப் போகும் வாசகர்களின் நலன் கருதியும் அதன் பாவனையாளர் வழிகாட்டி(User
Maual)கீழே தரப்பட்டுள்ளது
முதுகு சொறிதலுக்கென்றே
முதுகு சொறியும் கம்பு விற்பவனின் விளம்பரப் பாடல்!
எடுத்த
ஜென்மம் இது!.
முதுகு சொறிக்கும்
கம்பு
இது!
ஆதிக்காலம்
தொடக்கம்
பழகிப்
போன
முதுகு
சொறிதல் பணியினை
நவீன
யுகத்தில்
தொடர்ந்து
செய்யும்
கருவி
இது.!
வீண்
தொல்லை
ஒன்றும்
கொடுக்காது
வீட்டுச்
சுவரில்
தன்பாட்டில்
தொங்கிக் கிடக்கும்.
உங்கள்
முதுகு
சொறிதலுக்கு
மட்டுமல்ல
நண்பர்களின்
முதுகுகளையும்
சொறிந்து
கொடுப்பதற்கு
உதவி 'கரமான' கம்பு இது!
சொறியும்
இடத்தை
'காட்டி' கொடுக்கும்
விசுவாசமான கம்பு இது!
சொறியும்
இடத்தை
நாம் 'காட்டி' கொடுத்து
விட்டால்
போதும்
தன்
பாட்டில்
தன் பணி
செய்யும்!
வம்பு
தும்பு
இல்லாத
கம்பு இது!
உடலில்
கரம் நீளாத
பிரதேசங்களுக்கு
நீளுவதனால்
இது-
மூன்றாம் கை!
முதுகு
சொறிதலே
இதன்
பிறப்பின்
நோக்கம்
என்றாலும்,
உச்சந்தலை
முதற்கொண்டு
உள்ளங்கால்
வரை
சொறிந்து
கொள்வதில்
எந்த வித
பக்க விளைவுமில்லை.
‘தலைசொறிதல்’ எனும்
(குறிப்பாக பின் தலை)
பழக்கமிக்கவர்களுக்கு
பிடித்தமான
கம்பு இது.
பாவிக்கும்
‘அப்’ பாவி யாருக்கும்
அடிமைப்பட்டு
விடும்,
புத்தி
கொண்ட,
அப்பாவி
யாரையும்
அடிமைப்படுத்தி
விடும்
சக்தி
கொண்ட
கம்பு
இது!
காட்டு மூங்கிலிலான-அதை
காணும் வேளையெலாம்-அதனை
பிடித்து
முதுகை
சொறிய வேண்டும்
என்ற
உணர்வினை
தானாய்
ஏற்படுத்தும்
வசியம்மிக்க
மந்திரகோல் இது!
விலையை பற்றி யோசிக்காதீர்கள்!
சொறிதல்
நோய்
பரவாது
தடுத்து
மருத்துவச்
செலவினை
மிச்சப்படுத்தும்
ஒளடத கம்பு இது.!
மூங்கிலிலான
புல்லாங்குழல்
இசை
சுகமான
அனுபவம் போல்
முதுகு
சொறிதலை
சுகா
அனுபவ சொறிதலாய்
உணர
வைக்கும்
மூங்கிலாலான
மசாஜ்
கம்பு இது!
இது
பழுது அடைவதில்லை.
கண்ணுக்கு
தெரியாத ஆபத்து
ஒன்றும்
இதில்லை.
பகிரங்கமாகவே முதுகு சொறிதலை
தன்
கைங்க(கா) ரியமாக செய்யும்
மூங்கில்
கை இது!
உங்கள்
தேவைக்கு ஏற்ப
அதன்
வர்ணத்தை
மாற்றிக்
கொள்ளலாம்!
வர்ணம்
எதுவானாலும்;
அதன்
பிரதான பண்பான
முதுகு
சொறிதலை
அது
நிறுத்தி கொள்ளாது என்பதை
உறுதி
அளிக்கிறோம்.!
சிவப்பு
நிறம் பூசுவது சிறப்பு.!
சொறிதலில்
அது
தோல்நிற-பால்நிலை
இன-மத
பேதம் பாராது
எல்லா
முதுகுகளையும் சொறியும்.
சமத்துவ
உணர்வுமிக்க
கம்பு
இது!
இறுதியாய்
ஒரு அறிவிப்பு!
சர்வதேச
வியாபார குறிகள்
பதிவுச்
சட்டத்தின் கீழ்
இதன்
வடிவம்
பதிவுச்
செய்யப்பட்டிருக்க கூடும்
என்பதனால்
எந்தவொரு
அமைப்பும்
தனக்கான
சின்னமாக
இதன்
படத்தை பயன்படுத்துவது
சட்டபடி
குற்றமாகும்.
குறிப்பாக-
‘முதுகு சொறிவோர் சங்கம்’