Thursday, April 10, 2008

ஜோர்ஜ் புஷ்வும் செக்கடித் தெரு கனகு அக்காவும்




ஜோர்ஜ் புஷ்க்கும்
எங்கள் செக்கடித் தெரு
கனகு அக்காவுக்கும்
பல ஒற்றுமகள்!

கனகு அக்காவின்
மனசு வெள்ளை
புஷ்க்கு தோல்
மட்டும்தான் வெள்ளை.


கனகு அக்காவும்
கொள்ளக்காரிதான்
ஆனாலும்
ஜோர்ஜ் புஷ் மாதிரி அல்ல

புஷ்
பல நாடுகள
கொள்ள அடிப்பதில்
வல்லவர்
கனகு அக்கா
அன்பால்
மனித மனங்கள
கொள்ள அடிப்பதில் வல்லவள்.


'கனகு அக்கா
அப்பா சாயல்' என
அவ அம்மா
அடிக்கடி சொல்வா என
கனகு அக்கா
அடிக்கடி சொல்வாள்
ஆனாலும்
அடிக்கு ஒரு தரம்
ஜோர்ஜ் புஷ் அவர்
தன் அப்பா
சாயலில் இருப்பத
நிரூபிப்பத போல் அல்ல


என்ன ஜோர்ஜ் புஷ்
அண்ட நாட்டில்
சமாதானம் சாக
சண்டை செய்வார்
எங்கள் கனகு அக்கா
அண்ட வீட்டு சண்டைகள்
சமாதானம் ஆக
சண்டை செய்வாள.


கனகு அக்கா கிட்ட
வாய் கொடுத்து
தப்பியவன் கிடையாது
புஷ்க்கு நாடு கொடுத்து
த்ப்பியவன் உண்டா
இவ்வுலகில்?;

நியாயம் காப்பதில்
இருவருமே
முன் நிற்பவர்கள்
ஆனால் என்ன
புஷ் காக்கும்
நியாயத்தின் முன்
'அ'முன் நிற்கும்

இரண்டு பேருக்கும்
எண்ணெய்
என்றால் தனிப்பிரியம்
அதுவும் மத்தியக் கிழக்கு
எண்ணெய் என்றால்
'கொள்ளை' பிரியம்

கனகு அக்காவுக்கு
தலை வலிச்சா
Made in Saudia Arabia
axe oil
தலையில் தடாவ
தூபாய் வாசனை oil
ஆம்!
கனகு அக்காவுக்கு
மத்தியக் கிழக்கு
எண்ணெய் என்றால்
'கொள்ளை' பிரியம்

புஷ்க்கு
மத்தியக் கிழக்கு
எண்ணெய் தன
'கொள்ளை' அடிக்கும்
பிரியம் போல அல்ல;

இப்படியாய்
ஜோர்ஜ் புஷ்க்கும்¢
எங்கள் செக்கடித் தெரு
கனகு அக்காவுக்கும்
கன ஒற்றுமகள்!

ஆனாலும் பாருங்கள்
இருவரிடயே
செய்யும்¢ தொழிலால்
அபார ஓர் ஓற்றுமை

இரண்டு பேருக்குமே
'சுடு' வதுதான் தொழில்.

என்ன-
ஜோர்ஜ் புஷ்
எண்ணெய் கிணறுகளுக்காய்

'சுடு'கிறார்
மனிதர்கள் 'சா' குகிறார்கள்!
கனகு அக்கா
எண்ணெய் தடாவி

அப்பம் 'சுடு'கிறாள்
மனிதர்கள் 'சா'ப்பிடுகிறார்கள்!
அவ்வளவுதான்!

நன்றி 'அமுதம்'-இலங்கை


4 comments:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

அருமையான வரிகளுக்கூடாக உண்மைகளை வெளித்தந்துள்ளீர்.... இருந்தும் எம் நாட்டிலேயே இதை விட கொடுமைகள்..... தட்டிகேட்பாரற்று தவிக்குது தமிழ் மனம்!

Prapa said...

//இரண்டு பேருக்குமே
'சுடு' வதுதான் தொழில்.

என்ன-
ஜோர்ஜ் புஷ்
எண்ணெய் கிணறுகளுக்காய்
'சுடு'கிறார்
மனிதர்கள் 'சா' குகிறார்கள்!
கனகு அக்கா
எண்ணெய் தடாவி
அப்பம் 'சுடு'கிறாள்
மனிதர்கள் 'சா'ப்பிடுகிறார்கள்!
அவ்வளவுதான்!//

'புஷ்'
புஷ் வானம். ஹீ ஹீ.
நன்றி ஐயா, அருமை, ரசித்தேன்.

பி.அமல்ராஜ் said...

மிக அருமையான வரிகள் ஐயா..

மேமன்கவி பக்கம் said...

நன்றிகள் அமல்!