அணைக்கிறானா?
இல்லை
நெறிக்கிறானா?
குலுக்கிறானா?
இல்லை
முறிக்கிறானா?
என் மீது படிந்த
தூசியைத்
தட்டுகிறானா?
இல்லை
என்னிடம்
உள்ளதை தட்டிப் பறிக்க
முனைகிறானா?
கனிவுடன்
என்னைப் பார்கிறானா?
இல்லை
பகைமை கண் கொண்டு
என்னை வெறிக்கிறானா?
ஆபத்தில் நான்
மாட்டக் கூடாதென
வாஞ்சையுடன்
என்னை மறிக்கிறானா?
இல்லை
நான் நடந்துப் போகும்
உரிமையை வஞ்சனையுடன்
பறிக்கிறானா?
என்மீது அன்பு மழையை
பொழிகிறானா?
இல்லை
எரிக்கும்
நச்சு திரவத்தை
என்மீது வீசிகிறானா?
என்னைப் பார்த்து
சிரிக்கிறானா?
இல்லை
என்மீது
கோபம் கொண்டு
பல்லைக் கடிக்கிறானா?
ஒன்று பட்டு வாழ
அழைக்கிறானா?
இல்லை
என்னை கொன்று போட்டு
தான் வாழ
நினைக்கிறானா?
இவன்
என் சக மனுஷனா?
இல்லை
பகை மனுஷனா?
4 comments:
காலத்துக்குப் பொருத்தமான இயற்கையோடு ஒன்றித்த கவிதை, பல்லைக் கடித்துக் கொண்டு மேமன்கவி எழுதினாரோவென எண்ணத் தோன்றுகின்றது, காதலின் தாக்கத்தில் சிக்குண்ட மனிதம் தனது அராஜகக் கொடுங்கோலை எப்படி நீட்டியுள்ளது என்பதை அருமையாக சித்தரித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
அன்புடன்
இலக்கியா
மீண்டும் நன்றிகள் இலக்கியா!!!
கேலி போல் தெரிந்தாலும்ம்
கேள்விக்குள்ளாகி இருக்கும்
இந்த யுகத்து
வாழ்க்கை
என்னை இப்பொழுதெலாம்
இப்படிதான்
எழுத வைக்கிறது.
எல்லா துறையிலும்
வெறியாட்டம் மலிந்து கிடக்கையில்
குறியீடுகள், படிமங்கள் கூட
அகதிகளாகி விட்டன.
தொடர்வோம்......
கருத்து பரிமாறல்களை!
இப்போது தான் முதல் வருகை. முதல் வருகையிலேயே மனதைத் தொட்டு விட்டீர்கள். அடிக்கடி வருவேன். என்னுடைய http://xavi.wordpress.com க்கும் ஒரு தடவை வருகை தாருங்கள்
ஒன்று பட்டு வாழ
அழைக்கிறானா? - இல்லை;
என்னை கொன்று போட்டு
தான் வாழ நினைக்கிறானா?
நிச்சயமாக இன்றைய ஈழத்தின் நிலை கொன்று போட்டு வாழவே நினைக்கின்றான்.
சிந்திக்க வைக்கின்றன உங்கள் வரிகள்! இவ்வரிகளை வாசித்து முடித்த கணம் நெஞ்சம் ரணமானதை உணர்ந்தேன்;
என்று தான் தீருமோ கொடுங்கோள் ஆட்சி......? இவ்வாறாக வினாக்களை எனக்குள் தொடுத்துவிட்டு அடிக்கடி மௌனமாகின்றது என் மனசாட்சி...
தலையை பிய்த்துக் கொள்வதென்னவோ நான் தான்
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்
Post a Comment