Thursday, November 23, 2006

உம்மா சுட்ட ரொட்டியும் ஐ.நா.சபையும்

உம்மா ரொட்டிச் சுட்டா
சும்மா சொல்லக் கூடாது
அது தனி ருசிதான்!
உம்மா சுட்ட ரொட்டியை
சாப்பிட்டவன் எவனும்
சுகமாய் தூங்கலாம்.

உம்மா ரொட்டி சுடும்
அண்டைக்கு எங்க வூட்டுல
பெரிய சண்டைதான்
யாருக்கு-அதிக ரொட்டிகள் என்று!
பிற்குறிப்பு;
உம்மா சுட்ட ரொட்டிக்கும்
ஐ.நா.சபைக்கும் என்ன சம்பந்தம்?
அமெரிக்காவுக்கும் நியாயத்திற்கும் என்ன சம்பந்தமோ?
அந்த சம்பந்தம்தான்!

1 comment:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

உம்மா சுட்ட ரொட்டிக்கும்
ஐ.நா.சபைக்கும் என்ன சம்பந்தம்?
அமெரிக்காவுக்கும் நியாயத்திற்கும் என்ன சம்பந்தமோ?
அந்த சம்பந்தம்தான்!

Nice....!

இலங்கை ஆட்சிக்கும் அகிம்சைக்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தமும் தான்!

வாழ்த்துக்கள்